நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் காலை உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..

 
நரிக்குறவர் இன மக்களை சந்தித்து .. அவர்கள் வீட்டில் காலை உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..


சென்னை திருமுல்லைவாயல் மற்றும் ஆவடியில் நரிக்குறவர் இன மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது வீட்டில் காலை உணவருந்தினார்.   

 கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆவடி நரிக்குறவர் மாணவிகள் கல்வி தொடர்பாகவும், அவர்கள் படும் இன்னல்கள் குறித்தும் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருந்தது.  இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதை அடுத்து,  அவர் அந்த மாணவிகளை நேரில் அழைத்து பேசினார். அதன் பின்னர்   கடந்த 17-03-2022 அன்று  பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசரின் செல்போன் மூலம்,    காணொளி வாயிலாக ஆவடி நரிக்குறவர் மக்களிடமும், மாணவர்களிடமும் பேசினார்.

நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் காலை உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..

அப்போது அவர்களது குறைகளை கேட்டறிந்த  ஸ்டாலின், அவர்களை நேரில் வந்து சந்திப்பதாகவும், நரிக்குறவர்கள் வீட்டில் கறி சோறு சாப்பிடுவதாகவும் கூறியிருந்தார்.  அதன்படி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை நேரில் சந்தித்தார். திருமுல்லைவாயலில்  குறவர் மக்களுடன் தேநீர் அருந்திய அவர்,   குறவர் இன மக்கள் குடியிருப்பில் மரக்கன்றை நட்டு வைத்தார். மேலும் அவர்களுக்கு  குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் திட்டத் தொகை உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.   

நரிக்குறவர் இன மக்கள் வீட்டில் காலை உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்..

அதனைத்தொடர்ந்து ஆவடி  நரிக்குறவர் காலணிக்குச் சென்ற அவர், அங்கு நரிக்குறவர் இன மக்கள் வழங்கிய உணவை சாப்பிட்டார். நரிக்குறவர் காலணியில் உள்ள ஒருவர், காலை உணவை தயார் செய்து முதலமைச்சருக்கு  வழங்கியதை அடுத்து, அதனை வாங்கி சாப்பிட்டார். தொடர்ந்து அவங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசி வருகிறார்.