நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

 
tn

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் மு.க .ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றடைந்தார்.  பிரதமர் மோடியை  நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் , அண்ணா - கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவிற்கு அவரை நேரில் அழைத்தார்.  அத்துடன் தமிழக வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுத்த முதலமைச்சர்,  பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசினார் . 

tn

திமுக அலுவலக கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும்  நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

tn

இந்நிலையில்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்தார்.  இந்த சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில்,  தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை மத்திய அரசு உடனே  விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு "பொருநை நதிக்கரை நாகரிகம்" புத்தகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.