'தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள்' - நேரில் அழைத்து வாழ்த்து கூறிய முதல்வர்!!

 
tn

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்  என்ற நிகழ்ச்சியில் சிறுவர் -சிறுமியர் பங்கேற்று தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் புலிகேசி கெட்டப்பில் வந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததால் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன்  மத்திய தகவல் தொழில்நுட்ப துறையிடம் புகார் அளித்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸூம் அனுப்பப்பட்டது. 

tn

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெரியார் கெட்டப்பில் ஜூனியர் சிறுவர்கள் , பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? மதத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக நடித்து அசத்தினர். சிறுமி அத்துடன் பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியார் முன்னெடுத்த போராட்டம் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பேசினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்தது.



இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமுதாய விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட தந்தை பெரியார் நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் மற்றும் குறவன் குறத்தி நாடகத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

tn

இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல் இணையதள தொலைக்காட்சிக்குப் மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம், தனது பெற்றோருடன் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.   இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன். சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர். " என்று பதிவிட்டுள்ளார்.