உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இன்று தேசிய விவசாயிகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலரும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகோர்க்கு உணவளிக்கும் உழவர்கள் அனைவருக்கும் தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகள். இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி என வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றிய தலைவர் கலைஞர் வழியிலான நமது திராவிட மாடல் அரசு உங்களில் ஒருவனாக இருந்து உழவர்களைக் காக்கும். உணவு உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக நாம் படைத்து வரும் சாதனை தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.