செக்கிழுத்த செம்மலை போற்றுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

 
stalin

இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வ.உ.சிதம்பரனாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்ப் பற்று - ஈகையுணர்வு - விடுதலைத் தாகம் ஆகியவை கொண்டு வரலாற்றிலும் தமிழர் உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது நினைவு நாளில், இன்ப விடுதலைக்காகத் துன்பச் சிறையைத் துச்சமென நினைத்த அந்தச் செக்கிழுத்த செம்மலைப் போற்றுவோம்! அவரது தியாக வாழ்வை வணங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.