கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது - முதலமைசர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 
MK stalin letter MK stalin letter

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இது கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. 2021-22 கல்வியாண்டில் ஆண்டில் 84% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2024-25ல் 96% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-22ல், 78% ஆக இருந்த தேர்ச்சி சதவீதம், 2023-24ல் 92% ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், முதலமைசர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது #DravidianModel அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.