தமிழுக்கும், தமிழ்ச்சமூகத்துக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய - மு.க.ஸ்டாலின் புகழாரம்
மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்ரனர். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்!
— M.K.Stalin (@mkstalin) December 11, 2024
தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி #பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!
மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும்… pic.twitter.com/VVHOVGtRGx
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன். தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி #பாரதியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய என குறிப்பிட்டுள்ளார்.


