அரியலூரில் ரூ.174 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் வழங்கினார்
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சி திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய காலணி ஆலை மூலம் 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தபின் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சில் எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.