கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
TN

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.3.2024) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் தயாரிக்கப்பட்ட கலைஞர் தமிழ் குறித்து 100 நூல்களை வெளியிட்டார்.

TN

2022 ஜனவரியில் கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கைத் தொடக்கப்பட்டு, பிப்ரவரியில் 100 தமிழ் ஆய்வாளர்கள்/ படைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2023 அக்டோபர் 1 அன்று மும்பையில் கலைஞர் தமிழ் ஆய்வாளர்கள் பங்கேற்ற 'கலைஞர் தமிழ் ஆய்வு மாநாடு' நடைபெற்றது.

TN
அதன் தொடர்ச்சியாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை சார்பில் கலைஞர் -100 நூல் ஆவணங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டுக் குழுத் தலைவராக மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செயல்பட்டு, 'கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை' தலைவராக முனைவர் மு.கலைவேந்தன் அவர்களும், கவிஞர் சண்.அருள்பிரகாசம் அவர்களும் தமிழ் ஆய்வாளர்களுடன் இணைந்து கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்கள் தயாரிக்கப்பட்டு, திருவையாறு தமிழ்ஐயா வெளியீட்டகத்தால் பிரசுரிக்கப்பட்டது.

TN

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட கலைஞர் தமிழ் குறித்த 100 நூல்கள் மற்றும் அதன் அந்நூல்களின் ஆசிரியர்கள் விவரங்கள்
1.கலைஞரின் தமிழ்வழிக் கல்விக் கனவு - மருத்துவர் சு.நரேந்திரன்
2.KALAIGNAR'S WORLD OF LITERATURE - Dr. B. ILANGO

TN


3. கலைஞர் கண்ட அய்யனும் அடிகளும் – மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி
4.கலைஞரும் வள்ளுவரும் – முனைவர் வி.ஜி.சந்தோசம்
5. கலைஞரின் கவிதை மழையில் நனைந்தேன் – முனைவர் சரசுவதி
இராமநாதன்

TN