மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

 
tn

சென்னையில் குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் அலங்கார ஊர்திகள் நேற்று முதல் 23ஆம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதியில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

tn
இந்நிலையில் இந்திய விடுதலை போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட விடுதலைப் போரில் தமிழகம் என்ற மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  இதை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்து கொண்டிருந்ததை,  முதலமைச்சர் ஸ்டாலின்  கண்டு, தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, மாணவர்களுடன் கலந்துரையாடி, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது.
மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன்.தமிழ்நாடு வெல்லும்! " என்று பதிவிட்டுள்ளார்.