"பேருந்து கட்டண சலுகையால் மிச்சமாகும் பணத்தை பெண்கள் சேமிக்கிறார்கள்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
mk stalin

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று  திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி பொறுப்புக்கு வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பல நலத்திட்டங்கள் திங்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஸ்டாலின் பல மேடைகளில் திமுகவின் ஓராண்டு சாதனையை பேசி வருகிறார். 

tn

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர்.ராஜா அவர்களின் மகன் ஆர்.நெல்சன் மண்டேலா - பா.அபிராமி ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின்  அதலைமையேற்று நடத்தி வைத்தார். 

stalin

அப்போது திருமண விழாவில் பேசிய அவர், "தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிட்டோம். ஒராண்டில் செய்து முடித்ததையும் புத்தமாக வெளியிடும் அளவுக்கு பல காரியங்களை செய்து முடித்துள்ளோம். ஒராண்டில் மிகப்பெரிய சாதனை மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண சலுகை; இதனால் மிச்சமான பணத்தை சேமிக்கும் பழக்கத்திற்கு பெண்கள் வந்துள்ளார்கள்.இலவச பேருந்து திட்டத்தால் பெண்களுக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.600 முதல்ரூ.1,200 வரை மிச்சமாகிறது. வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்து நன்மை செய்யும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது" என்றார்.