இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாக செயல்படக்கூடியவர் கனிமொழி - முதலமைச்சர் பேச்சு

 
stalin
​​​​​​இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாக செயல்படக்கூடியவர் கனிமொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கலைஞர் இந்தியாவின் அரசியல் அடையாளமாக, நிர்வாகத்தினுடைய இலக்கணமாக, அனைவரும் ஒப்புகொள்ளக்கூடிய ஒரு ஆளுமையாக இருந்தார். அதனை வெளிக்காட்டும் வகையில் இந்த போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஏற்பாடு செய்துள்ள கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அவர்களுக்கு நன்றி. 

பாசத்தை பொழியும் போது கனிமொழியாகவும், தமிழ்நாட்டின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் பேசும் போது கர்ஜனை மொழியாகவும் இருக்கிறார் கனிமொழி. நீங்கள் அனைவரும் நாடாளுமன்ற பேச்சுக்களை கேட்டு இருப்பீர்கள். இந்திய நாடாளுமன்றத்தில் வீரமங்கையாக செயல்படக்கூடியவர் கனிமொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.