வக்ஃபு சட்டத்திருத்தம் மத உரிமையை பாதிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்ஃபு சட்டத்திருத்தம் இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. இன்றைய அலுவல் தொடங்கியதும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தின் போது பேசிய அவர், இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் வக்ஃபு சட்டத்திருத்தம் இருக்கிறது. வக்ஃபு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்த்தனர். சட்டத்திருத்தத்தின் மீது எதிர்கட்சிகள் சொன்ன திருத்தங்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு நிராகரித்துள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த முன் வடிவினை மத்திய முழுமையாக திரும்ப பெற வேண்டும் என பேசினார்.


