குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம்-ஒழுங்கை குறை கூற வேண்டாம் - முதலமைச்சர் பேச்சு

 
stalin

குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் - ஒழுங்கை குறை கூற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முன்னேற்ற பாதையில் தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான அரசியலை செய்ய முன்வாருங்கள். குறிப்பிட்ட சில சம்பவங்களை வைத்து சட்டம் - ஒழுங்கை குறை கூற வேண்டாம். தமிழகம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். திமுக ஆட்சியில் எந்த கலவரமும் நடைபெறவில்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அவதூறு பரப்புகின்றனர். மரபுகளை கடைப்பிடிக்க வேண்டும். சபாநாயகரை அச்சுறுத்தும் வகையில்கை நீட்டி பேசுவதா?.  அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெற்று தான் பேசவேண்டும் என கூறினார்.