ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம் -முதலமைச்சர்

 
MK STalin MK STalin

ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பு மிக முக்கியமானது. இதனை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந் தேதி பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-  சமூக நீதியும், சமச்சீர் தொழில் வளர்ச்சியும் கருணாநிதியின் இரு கண்கள்.சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான தனி கொள்கையை உருவாக்கியவர் கருணாநிதி. சிறு, குறு நடுத்தர தொழில் துறையினருக்காக 4 தனி குழுமங்கள் அமைக்கப்படுகிறது. ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்க சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம். திண்டிவனம், திருமுடிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 6 தொழிற்பேட்டைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.