இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப்பங்கு வகிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சி தனித்துவமானது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப்பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. கோவை, திருச்சி, ஒசூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன.
கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு மின்சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது தமிழ்நாடு. சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3ஆவது திட்டம் தயாராகி வருகிறது. பசுமைப் பொருளாதார துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு - சிஐஐ இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவேன் என கூறினார்.