திமுக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது- முதலமைச்சர் பேச்சு

 
stalin

மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் சென்னை மெரினா, தூத்துக்குடி  கடற்கரைகளில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கான கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்டவற்றை  ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உயிர்களும் சமம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே  அரசின் கொள்கை.  மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது 

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.64 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது  மாற்றுத்திறனாளிகளுக்கு மகளிர் உதவித் தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது . தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது . மாற்றுத்திறனாளிகளுக்கு 22 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.