அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - முதலமைச்சர் அறிவுறுத்தல்!

 
mk stalin

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான் மற்றும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

களஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களில் அதி கவனம் செலுத்த வேண்டும். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.  அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை வேகப்படுத்த வேண்டும். மேலும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.