வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அந்நிலையை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மத்திய, தென் சென்னையை சாட்டிலும் வடசென்னைக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.6400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் உள்ள எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90%-க்கும் மேல் நிறைவேற்றி விட்டோம். விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் என தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.
வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அந்நிலையை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது. வடசென்னை பகுதியை தென்சென்னைக்கு இனையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ₹1000 கோடி இல்லை, ₹6400 கோடியாக வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


