ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
mk stalin mk stalin

ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
  
கள ஆய்வில் முதலமைச்சர்  திட்டத்தின் கீழ் 4  நாள் பயணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நாகை மற்றும் திருவாரூர்  மாவட்டங்களுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் நாகை மாவட்டம் சென்ற அவர், திருக்குவளையில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து,  மாணவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார்.  அதனைத்தொடர்ந்து நேற்று  நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார்.

stalin

  இதனைத்தொடர்ந்து   திருவாரூருக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கினார். பின்னர்  திருவாரூர் அருகே பவத்தர மாணிக்கத்தில் நடைபெறும் கம்யூனிஸ்ட் எம்.பி.,  செல்வராஜின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை  வாழ்த்துகிறார். இந்த நிலையில்  இன்று காலை திருவாரூர் தெருக்களில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.  இன்று மதியத்துடன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் இன்று திருவாரூரில் நடைபெற்ற நாகை எம்.பி. செல்வராஜின் இல்ல திருமணம் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  இந்தியாவை காப்பாற்றவே, இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதக்கலவரங்களால் நாட்டை துண்டாக்கும் கொடிய ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது எனவும் கூறினார். சி.ஏ.ஜி. அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளதால் ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என கூறினார்