தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்  நாட்டினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.  சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் தொழிற்சாலை அமையவுள்ளது.  இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அரசு முன்னெடுத்த நிவாரணப் பணிகள் தொடர்பான புகைப்படங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

stalin

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அனைத்து நிவாரண உதவிகள், மீள்கட்டமைப்பு பணிகளையும் மாநில அரசுதான் அதன் நிதியில் செய்கிறது. . நெல்லை, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ₹6000 வழங்கப்பட்டுள்ளது▪️ சேதமான, முழுவதும் இடிந்த வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.