திராவிட இயக்கம் தோன்றியதே சமூக நீதியை நிலைநாட்ட தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இட ஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்/ரு விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெறார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் `ரோடு ஷோ' நடத்தினார். இதனை தொடர்ந்து வழுதரெட்டியில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதிப் போராளிகளை போற்றும் வகையில், ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடனான நினைவு அரங்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீரத்தின் விளைநிலம் விழுப்புரம். திராவிட இயக்கத்தின் தலைமகனாக திகழ்ந்தவர் மறைந்த கோவிந்தசாமி. கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை திறந்து வைத்தது எனக்கு கிடைத்த வாழ்நாள் பெருமை. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற 43வது நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கினார். திராவிட இயக்கம் தோன்றியதே சமூக நீதியை நிலைநாட்ட தான். இட ஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது திமுக என கூறினார்.


