"சில மாணவர்களை கல்லறைக்கும், சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?"

 
ttn

மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு என்பது ஒரு பலி பீடம் போன்றது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

tn

இந்நிலையில் நீட் விலக்கு  மசோதாவை மீண்டும் தாக்கல் செய்த பின்னர் , சட்டமன்றத்தில்  உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "நீட் விலக்கு மசோதா நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியது எப்போது? குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியது ஓராண்டுக்குப் பின்னர்தான் நீதிமன்றம் மூலம் தெரிந்தது. நீட் தேர்வு என்பதை விட அது மாணவர்களை கொல்லும் பலிபீடம் என்றே சொல்லவேண்டும். தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு மட்டுமே நீட்டால் நன்மை. 2016 இல் அவசர சட்டம் மூலமாக நீட் தேர்வை கொண்டு வந்தது.  பாஜக அரசு மாணவர்களின் மருத்துவ கனவில் தடுப்பு சுவரை எழுப்பி எழுப்புகிறது நீட்.  நீட்  என்னும் சமூக நீதி அநீதியை அகற்ற இந்த சட்டப்பேரவையில் முடியும் . இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக்காக நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

tn

சில மாணவர்களை கல்லறைக்கும் சில மாணவர்களை சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா? ஊரக மாணவர்களை மருத்துவக் கல்விக்குள் நுழைய விடாமல் தடுக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை தடுக்கிறது.  மருத்துவர்கள் கனவிற்கு தடுப்புச் சுவராக இருக்கிறது. நீ டாக்டராக முடியாது என்று தடுக்கிறது. உனக்கு தகுதி இல்லை என தடுக்கிறது. அதனால்தான் நீட் விலக்கு மசோதாவை நாம் கொண்டு வருகிறோம். தகுதி என்னும் பெயரால் வரும் தீண்டாமையை அகற்றி எறிய வேண்டாமா? நுழைவுத்தேர்வு ஒழிப்பு சட்டத்தை இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த சட்டமன்றம் தான். அரசியல் சட்டம், பாகுபாடு கூடாது என்கிறது; ஆனால், நீட் தேர்வு பாகுபாட்டை உருவாக்குகிறது.  நீட் என்ற சமூக நீதி அநீதியை அகற்ற சட்டமன்றத்தில் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பேசிக்கொண்டிருக்கிறேன். பல சாதனைகள் செய்த இந்த சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான முடிவையும் எடுக்க முடியும் " என்றார்.