ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின், சென்னை தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு ஆளில்லா வான்வழி தொடங்கி வைத்தார். உயர் கல்வியை அனைவரும் பெறும் வகையிலும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு உட்பட்ட அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டுவரும் வகையிலும்,  கொள்கைகள் வகுக்கப்பட்டு தமிழ் நாட்டின் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில்,  பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.  தமிழ்நாடு அரசின் கல்வி குறித்த பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகளும் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் சிறப்பான செயல்பாடுகளுமே  இதற்கு காரணம். 

CM Stalin

2021 22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மற்றுமொரு புதிய முன்மாதிரி முயற்சியாக ஆளில்லா விமானங்கள் என தமிழ்நாடு ஆளில்லா விமான கழகம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து துவக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தமிழ்நாடு மட்டுமில்லாது பிற மாநிலங்களிலும் உள்ள அரசு சார்ந்த முகமைகள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதில் உறுதுணையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ttn

அந்த வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது சமூக பயன்பாடுகளுக்கான ஆளில்லா விமான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு குறித்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதேபோல் முதல்வர் முக ஸ்டாலின் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி மையத்தையும் திறந்து வைத்தார்.