அம்பேத்கரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எனக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர் என்று கூறியவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கரின் புகழை கலைஞர் எப்படியெல்லாம் போற்றினார் என்பதற்கு பெரிய பட்டியலே உள்ளது.
1972ம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக அம்பேத்கர் பெயரில் அரசுக் கல்லூரி. 1989ல் சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது1990ம் ஆண்டு அம்பேத்கர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்டப் பல்கலை.க்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது என கூறினார்.


