இசைப்புயல் ஸ்டூடியோவிற்கு விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்

 
tn

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான்கு நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். நேற்று துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.

tn

இதை தொடர்ந்து துபாயில் உள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

tn

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் துபாயில் உள்ள தனது ஸ்டுடியோவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் அதை ஏற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு சென்றார்.  அங்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள  ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு திரையிட்டு காண்பித்தார். இந்த நிகழ்வின்போது முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, உதயநிதி ஸ்டாலின் ,கிருத்திகா உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

tn

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், #DubaiExpo2020 பார்வையிடச் சென்ற என்னை நண்பர் 'இசைப் புயல்'  ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் தன்னுடைய ஸ்டூடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை காண்பித்தார்.தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை!  என்று பதிவிட்டுள்ளார்.