நீங்கள் நலமா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீங்கள் நலமா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக நடந்து வருகிறதா என கள ஆய்வும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நீங்கள் நலமா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வின்போது பொதுமக்களுடன் தொலைபேசியில் உரையாடுவார் என தகவல்  வெளியாகியுள்ளது. 

இதேபோல் அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து அமைச்சர்கள், துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இன்று ஆய்வு செய்கிறார். மகளிர் விடியல் பயணம், காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார்.  கடந்த மார்ச் மாதம், ‘நீங்கள் நலமா‘ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்காது.