அசோக் கெலாட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஸ்டாலின்

 
ttn

ராஜஸ்தானின் தற்போதைய முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  முதலமைச்சர் அசோக் கெலாட் ஏற்கனவே  டிசம்பர் 1998 முதல் 2003 வரையிலும், 2008 முதல் 2013 வரையிலும் , மீண்டும் 17 டிசம்பர் 2018 வரையிலும் முதல்வராக பணியாற்றியவர். அத்துடன்  ஜோத்பூரின் சர்தார்புரா தொகுதியின்   சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 

tn

இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் , அமைப்புகளின் பொறுப்பாளராகவும், மார்ச் 2018 முதல் ஜனவரி 23, 2019 வரை பயிற்சியாளராகவும் இருந்தார் . 2017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின்போது குஜராத் மாநிலத்தின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் 



இந்நிலையில் ராஜஸ்தான்  முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று தனது 72 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ராஜஸ்தான் மக்களுக்குச் சேவை செய்ய நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.