மின்சார சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும் - முதலமைச்சர் கடிதம் ..

 
ஸ்டாலின்

2003ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட,   உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மின்சார சட்டம் 2003ல் பல்வேறு திருத்தங்களை செய்து  புதிய மின்சார திருத்த சட்ட  முன்வடிவை மத்திய அரசு வெளியிட்டது. நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா ஊடரங்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காலத்தில், கடந்த  ஆண்டு  ஏப்ரல் 17ஆம் தேதி  அன்று விவசாயிகளின் கருத்தை கோரி  சட்டதிருத்த முன்வடிவை வெளியிட்டது.  இந்த திட்டத்தினால் மாநில மின் வாரியங்களுக்கு  பதிலாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்  என்றும், இந்த ஆணையத்திடம் அனுமதி பெற்று பின் மின் வினியோகத்தில் தனியார் நிறுவனம் ஈடுபடலாம் என்று கூறப்பட்டிருந்தது.

மின்கட்டணம் செலுத்த இதுவே கடைசி நாள்? காலக்கெடுவை நீட்டித்த  மின்சார வாரியம் !

இந்த புதிய மின்சார சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஏழை-எளிய மக்களுக்கு மின்சாரம் என்பது எட்டாக்கனியாக விடும் .  இதனால் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். அதைவிட மின்சார உற்பத்தி,  மின் வினியோகம் ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் வசம் சென்று விடும். அப்படி தனியார் வசம் சென்றுவிட்டல், தமிழகத்தில் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம்,  மின்சார மானியம் போன்ற சலுகைகள் அவர்களுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதன் காரணமாக விவசாயிகள் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கக்கூடும் என்பதால் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும்  நடத்தினர். இந்நிலையில் மின்சார சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்க வேண்டும்  என முதலமைச்சர் , பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின்
அதில், “ மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த முடிவு, தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு சாதகமாகவும்,
மின்சார சட்டத் திருத்தம் பொதுத்துறை நிறுவனங்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்
மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், மாநில அரசு நிறுவன செயல்பாடுகளில் தலையிடுவதாக உள்ளது என்றும்,
எனவே, மின்சார சட்டத் திருத்த முன்வடிவினை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.