தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக பேசுபவர் விஜயகாந்த் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி இரங்கல்

 
tn

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைப்பட நடிகரும். தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகஉள்ளது;

tn

தனது திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த்;

இதற்காக இந்திய அரசின் சிறந்த குடிமகனுக்கான விருதையும் பெற்றவர்;தனது நடிப்பிற்காக கலைமாமணி விருது, எம்.ஜி.ஆர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், ரசிகர்களால் கேப்டன் என்று பெருமையோடு அழைக்கப்படுவதையே பெரும் விருதாகக் கருதினார்; 

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் விளங்கியவர், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் வெற்றிகரமான தலைவராக முத்திரை பதித்தவர்;

tn

தனக்கு சரியென்று பட்டதை தைரியமாக வெளிப்படையாகச் சொல்லும் போக்கு எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரை உலகிற்கு அடையாளப் படுத்தியுள்ளது; 

சினிமா, அரசியல் என ஒரு தனி மனிதராக அவர் சாதித்தவை உழைப்பை ஊன்றுகோலாகக் கொண்டவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்; 

விஜயகாந்த்-ன் இழப்பு திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்; 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.