முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண முதலமைச்சர் ஸ்டாலின்..!!

 
முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண முதலமைச்சர் ஸ்டாலின்..!! முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண முதலமைச்சர் ஸ்டாலின்..!!

முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மருந்து இருப்பு, சேவையின் தரம் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக வருகை தந்துள்ள  தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்றைய தினம் பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையை திறந்து வைத்த அவர், இன்று காலை தஞ்சாவூரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

 மருந்தகம்

இந்த ஆய்வின் போது, மருந்துகளின் இருப்பு நிலை, வழங்கும் நடைமுறை, மற்றும் பொதுமக்கள் வருகை குறித்து பணியாளர்களிடம் நேரடியாக விவரங்களை கேட்டறிந்தார். மக்கள் நலன் கருதி குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முதல்வர் மருந்தகம் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் சேவையின் தரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார்.

இத்திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அதன் மூலம் மருத்துவச் செலவுகள் கணிசமாக குறைத்துவருவதாகவும், அந்த மருந்தகம் பணியாளர் முதல்வரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.