கேரள மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து..!
கேரள மக்களுக்கு இந்த ஓணம் பண்டிகை நம்பிக்கை மற்றும் வலிமையை தரட்டும் எனக்கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரள மக்களால் 10 நாட்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை தான் ஓணம். கேரளா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் வசிக்கும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி வருகின்றன. ஆனால் கேரளாவில் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு பேரிடரால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கலையிழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதர, சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள். பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்தப்பண்டிகை காலம் நம்பிக்கையையும், வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும், வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
ലോകമെമ്പാടുമുള്ള എൻ്റെ മലയാളി സഹോദരങ്ങൾക്ക് ഹൃദയം നിറഞ്ഞ #ഓണാശംസകൾ!
— M.K.Stalin (@mkstalin) September 15, 2024
വലിയൊരു പ്രകൃതി ദുരന്തത്തിന്റെ ആഘാതത്തിൽ നിന്ന് കരകയറുന്ന കേരളത്തിലെ എൻ്റെ ദ്രാവിഡ സഹോദരങ്ങൾക്ക് ഈ ഉത്സവകാലം പ്രത്യാശയും ശക്തിയും നൽകട്ടെ.
ഈ ഓണക്കാലം മലയാളികളുടെ ഒത്തൊരുമയുടെയും അതിജീവനത്തിന്റെയും… pic.twitter.com/52ppKMnETW