கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

 
tn

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்திற்கு நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தையும் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. ஜல்லிக்கட்டை அங்கீகரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பாஜக அரசு வாதித்தது . திமுக தான் முன் நின்று நிரந்தர தீர்வு நீதிமன்றத்தில் பெற்றது. 

tn

 போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் மதுரை. சாதி பிளவுகளும்,  மத வேறுபாடுகளும் தமிழர் ஒற்றுமை சிதைக்க உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து தமிழர் என்று நமது அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு போட்டி பண்பாட்டு திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவோம்.  திமுக ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகளுக்குள் மதுரையில் கீழடி அருங்காட்சியகம்,  கலைஞர் நூற்றாண்டு நூலகம் , ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று முக்கிய கம்பீர சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  2015ல் ஒன்றிய பாஜக அரசால் அறிவிக்கப்பட்டு இன்னும் மதுரைக்கு கொண்டுவரப்படாத திட்டம் ஒன்று உள்ளது. இந்த நேரத்தில் அது உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல என்றார்.