வட மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 
tn

இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

tn

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஆனது கடந்த 19ஆம் தேதி 39 தொகுதிகளிலும் , புதுச்சேரியிலும் நடந்து முடிந்துள்ளது.  மக்களவை தேர்தல் ஆனது ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்துள்ளது . மேலும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலையொட்டி டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருவதாகவும், விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

tn

தமிழகத்தில் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 வரை 20 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். இந்த சூழலில் வடமாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.