உதகையை உருவாகிய ஜான் சல்லிவனின் மார்பளவுச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்..

 
உதகையை உருவாகிய ஜான் சல்லிவனின் மார்பளவுச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்..

உதகை நகரைக் கட்டமைத்த ஜான் சல்லிவனின் மார்பளவு வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.   

உதகையின் 200வது ஆண்டு விழாவையொட்டி  பல்வேறு நலத்திட்டப் பணிகளை  இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்தவகையில்  200 ஆண்டுகளுக்கு  முன்பு  உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த  “ஜான் சல்லிவன்” அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கலச் சிலையினை திறந்து வைத்தார்.  “ 1788-ஆம் ஆண்டு லண்டலில் பிறந்த ஜான் சல்லிவன்,    1815 முதல் 1830 வரை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.  இதற்கிடையே 1819-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தான் இவர்  நீலகிரி மாவட்டத்தைக் கண்டுபிடித்தார்.   

உதகையை உருவாகிய ஜான் சல்லிவனின் மார்பளவுச் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்..

 சுமார் மூன்று வார காலம் அப்பகுதியைச் சுற்றிப்பார்த்த அவர் அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார். நீலகிரியின் முதல் கட்டடமான இக்கல்வீடு இன்றளவும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் உள்ளது. அதன்பிறகு இப்பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்தப் பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு.  மேலும், மக்கள் எளிதில் இப்பகுதியை அணுகிட 1820-ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையையும் ஏற்படுத்தினார். பின்னர், ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டுவைத்தார்.

ஸ்டாலின்

 ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் உருவாக்கினார். மேலும், மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.  இப்படியாக உதகை நகராட்சியினை 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைத்த பெருமைக்குரிய ஜான் சல்லிவன் அவர்களை நினைவுகூறும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலை முக்கோண வடிவு உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.