"ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் நடவடிக்கை எடுக்கப்படும்" - முதல்வர் ஸ்டாலின் உறுதி!

 
stalin

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது என முதல்வர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சென்னை கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரே உணவு பரிமாறினார். நிவாரண பொருட்களையும் மக்களுக்கு வழங்கினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்ட அவர் ஜீப்பில் இருந்த படியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

stalin

அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தியாகராயநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெறப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி என்ன ஆனது?. தியாகராய நகர் ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்றும் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.