மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணி: கோப்புகளில் கையெழுத்திட்டு, மக்களுடன் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்..!!

 
CM Stalin in apollo Hospital CM Stalin in apollo Hospital

மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக உரையாடினார்.  


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ,  நேற்று முன்தினம் (ஜூலை 21) காலை நடைபயிற்சியின் போது  லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நண்பகலில்  அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு  தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவமனையிலேயே இருந்து வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தவாறே அரசு அலுவல் பணிகளையும் கவனித்து வருகிறார்.  

CM Stalin in Apollo Hospital

அந்தவகையில் நேற்று கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தத்துடன் ஆலோசனைகள் மேற்கொண்டார்.  இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம், காஞ்சிபுரம் , கன்னியாகுமரி, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.  ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களின் நிலை குறித்து மனுக்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து விசாரித்த அவர்,  பயனாளிகளுடனும் நேரடியாக கலந்துரையாடினார்.  அத்துடன் முக்கிய கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார்.