விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கலைஞர் கைவினை திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1950-களில் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து களம் கண்டு போராடியது நம் தமிழ்நாடு.அந்த உணர்வோடுதான் தமிழ்நாடு அரசின் மிக மிக முக்கியமான 3 மாறுதல்களை முன்வைத்தது. அதை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்க மறுத்துவிட்டது. அதனால்தான் பிரதமரின் விஸ்கர்மா திட்டத்தை தமிழ்நாடு ஏற்காது என ஒன்றிய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக நாங்கள் தெரிவித்துவிட்டோம்.
விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக எதிர்த்தோம். குடும்ப குலத்தொழிலை ஊக்குவித்து வெளியுலகை காணாமல் இருக்கச் செய்கிறது பாஜக. விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்றாக கலைஞர் கைவினைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


