’மின்னணு தகவல் பலகை’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்ச மு.க.ஸ்டாலின்...

 
சிஎம் டேஷ்போர்டு


தமிழக அரசின் திட்டங்களின் செயல்பாடுகளை  தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் சிஎம் டேஷ்போர்டு ( CM dashboard) திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியாக  மின்னணு தகவல் பலகை  என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  அனைத்து துறை சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து நாள்தோறும் தானே கண்காணிக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். மின்னணு  தகவல் பலகையை கொண்டு வாரம் ஒருமுறை மாநிலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.

தமிழ்நாடு 360

அதன்படி,.  மின்னணு தகவல் பலகை  (CM dashboard) ஒன்று  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறையில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு 360 என்ற இந்தத் திட்டம் மூலம், தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், ஆட்சி நிர்வாகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல்பலகை உருவாக்கப்பட்டுள்ளது.

சிஎம் டேஷ்போர்டு
முதலமைச்சர் அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த  மின்னணு தகவல் பலகையில்,  நிகழ்நிலை புள்ளிவிவரங்கள்,  தேர்தல் வாக்குறுதிகள், வெளியிட்ட அறிவிப்புகள், அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீதான  நடவடிக்கைகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த தவகல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அடுத்த ஒரு ஆண்டுக்கான திட்டங்கள் இந்தப் பலகையில் இடம்பெறும் எனவும், எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகின்றன,  பணிகளின் முன்னேற்றம், எங்கெல்லம் பனிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது போன்ற அனைத்து விவரங்களையும் இந்த தகவல் பலகை மூலம் முதலமைச்சர் நேரடியாக கண்காணிப்பார்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.