நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
cm stalin cm stalin

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை பீகார் புறப்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வருகிற  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அதே சமயம் பாஜகவை எதிர்க்க ஒரு வலுவான எதிரணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இதன் காரணமாக நாளை மறுநாள் பாட்னாவில்  எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது

Modi vs rahul

கடந்த ஜூன் 12-ம் தேதி பாட்னாவில் நடக்கவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒடிசா ரயில் விபத்து காரணமாக  ஜூன் 23- ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக கைக்கோர்க்கவே இக்கூட்டத்தை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

meeting
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.