உம்மன் சாண்டி மறைவு - முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

 
tn

உம்மன் சாண்டி மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

tn

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (79)  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. உம்மன்சாண்டி மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமான கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின்  உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கேரள முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு. உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ஒரு உண்மையான மக்கள் தலைவர், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். #உம்மன்சாண்டியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில், அவரது குடும்பத்தினருக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.