கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

 
tn

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

kalaignar memorial
மறைந்த முன்னாள்  திமுக தலைவரும்,  முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் திமுக திமுகவினரால் கொண்டாடப்பட்ட வருகிறது.  அந்த வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலைஞர் 100 விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது . தமிழ் திரையுலகில் தனது வசனத்தினாலும் சிந்திக்க வைக்கும்,  கருத்துக்களினாலும் வசனகர்த்தாவாக வலம் வந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைமையில் வருகிற 6ம் தேதி சனிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் “கலைஞர் 100" திரைத்துறையின் மாபெரும் கலைவிழாவிற்கான அழைப்பிதழை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி வழங்கினார்.

tn

முன்னதாக நடிகர்கள் கமலஹாசன் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அதேபோல விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பர துறை அமைச்சர் சாமிநாதன் , தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி,  வெங்கடேஷ் , மலையாள நடிகர் மம்முட்டி , மோகன்லால்,   கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.