தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

 
fishermen

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது, வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

fisher
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்  வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற  நிலையில் அவர்கள் மீது  இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.  ஆறுகாட்டுத்துறைக்கு  அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.பாஸ்கர் என்ற மீனவரின் மண்டை பிளந்து 21 தையல் போடப்பட்டது. 5 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி கருவிகளையும், மீன்களையும் கொள்ளையடித்தனர்.  

fisher

இந்நிலையில் நாகை, வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு போலீசார் 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் மீனவர்கள் மீது கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தி ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.