கோவை குற்றாலம் அருவி மீண்டும் திறப்பு
Jul 30, 2025, 15:16 IST1753868782205
கோவை குற்றாலத்திற்கு வரும் நீர் வரத்து சீரானதால் நாளை (வியாழக்கிழமை) முதல் கோவை குற்றாலம் அருவி திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
![]()
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 23ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் அருவி மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். மேலும் பொதுமக்கள் கோவை குற்றாலம் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீர்வரத்து சீரானதால் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் கோவை குற்றாலம் அருவி திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் கோவை குற்றாலம் அருவி திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


