கோவை - பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

 
rtn

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி, கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்றவாகனப் பேரணியில் பங்கேற்றார். இந்தப் பேரணியில் சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

tn

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்வில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.  கோவை பாஜக நிர்வாகிகளுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

tntn

அத்துடன் கோவை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பிரதமர் மோடியின் பரப்புரைக்கு அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். பள்ளி மாணவர்களை தவறாக வழிநடத்தியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது ஒரு பிரிவில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.