காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
மேட்டூர் அருகே மாதையன் குட்டையில் காதலன் ஏமாற்றியதால் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அருகே மாதையன் குட்டை, ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி சக்திவேல் -சங்கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இவரது இரண்டாவது மகள் ஷிவாலினி(18). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஷிவாலினியும் மாரியம்மன் குட்டை பகுதியை சேர்ந்த பார்த்திபன்(22) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பார்த்திபன் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாக ஷிவாலினிக்கு தகவல் கிடைத்தது. இதனால் மனம் உடைந்த சிவாலினி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று மாலை பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் காதலன் பார்த்திபனன கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மறுப்பு தெரிவித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர், இதனை அடுத்து பெற்றோர்கள் விவாலணியின் உடலை பெற்றுக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


