வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை
பொள்ளாச்சி அருகே கத்திக்குத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல தாய், தந்தை இருவரும் பணிக்கு சென்றிருந்தனர். தனியாக வீட்டில் இருந்த அஸ்விதா உடலில் கத்தி குத்து காயங்களோடு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவி உயிரிழந்ததாக தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.


