கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து! உடன் சென்ற நண்பனே கத்தியால் குத்திய அதிர்ச்சி

 
ச் ச்

அந்தியூர் அருகே கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வேதகாரன்குட்டை பகுதியை சேர்ந்தவர் தயானந்த் (19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருடன் படிக்கும் நண்பரான பருவாச்சி, அம்மன்பாளையம் பகுதியில் சேர்ந்த கௌதம் (20) என்பவருடன் பர்கூர் மலை பகுதிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வரட்டுப்பள்ளம் அணை சோதனை சாவடி அருகே இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்கி சண்டை போட்டுள்ளனர், அப்போது  கௌதம் தயானந்தை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து மற்றும் தலை பகுதியில் காயமடைந்த தயானந்த் அங்கிருந்து அருகிலுள்ள வனத்துறை சோதனை சாவடி பகுதிக்கு வந்துள்ளார், உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு  தயானந்தை அனுப்பி வைத்தனர், அங்கு முதலாளி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக பர்கூர் போலீசார் கௌதமை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கௌதமிருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் கௌதமனிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.