மொட்டை மாடியில் கஞ்சா பயிரிட்ட கல்லூரி மாணவர்கள்.! தட்டி தூக்கிய கோவை போலீஸ்..!

மாணவர்கள், இளைஞர்களை பாழாக்கும் கஞ்சாவை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என திமுக அரசு காவல்துறை யினருக்கு உத்தரவிட்டது. மேலும், கஞ்சா வியாபாரிகள், உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றியது.
இந்நிலையில் கோவையில் கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கிய வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குனியமுத்தூர் காவல்துறை கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த தனியார் தங்கும் விடுதிகள், வீடுகள் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது ஒரு மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மாடியில் கஞ்சா செடிகளை மாணவர்கள் வளர்த்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 22 கஞ்சா கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வெளியில் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து தாங்களாவே கஞ்சா தயாரிக்கும் வகையில் வீட்டிலோயே கஞ்சா செடி தோட்டத்தை வளர்த்துள்ளனர்.
இதனையடுத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த கல்லூரி மாணவர்களான கேரளா மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த விஷ்ணு (வயது 19), அரியலூரைச் சேர்ந்த கலைவாணன் (வயது 21), அனுருத் (வயது 19) தனுஷ் (வயது 19) அவினவ் (வயது 19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.