தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க காவல் ஆணையர் வருகை

 
tn

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டி பிடித்து கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் இருந்து தீ  வரவில்லை” - சென்னை காவல் துறை | Fire did not originate from petrol-filled  bottle thrown in front ...

ஆனால் காவல்துறையோ, ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீதுதான் பெட்ரோல் குண்டு விழுந்தது. பெட்ரோல் குண்டு வீச்சில் எந்த சேதமும் இல்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் மதுபோதையில் இருந்துள்ளார் என விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநர் மாளிகை வருகை புரிந்துள்ளார். நேற்று நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வருகை என தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் வீச்சு சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது